534. சென்னையில் கலாச்சாரக் காவலர்களின் அராஜகம்
சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்ற இரு இளம்பெண்களை, (ஆஷாதீப் என்கிற) எக்மோரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும், "கலாச்சார"க் காவலராக அவதாரமெடுத்து அடித்து உதைத்துள்ளதை செய்தியில் வாசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது!
கோகுல் (மாணவர்), விஷால் (BPO-வில் பணி புரிபவர்) என்ற இளைஞர்கள் தங்கியிருந்த ஃபிளாட்டுக்கு, அப்பெண்கள் வியாழன் காலை சென்று, ஒரு அரைமணி நேரம் கழித்து, கதவைத் தட்டிய இந்த கலாச்சார காவல் கனவான்கள், அப்பெண்களை ஆபாசமாகத் திட்டியதோடு, அப்பெண்களை உடனடியாக வெளியேறுமாறு (இல்லையேல் போலீசைக் கூப்பிடப் போவதாகவும்?!) மிரட்டியுள்ளனர். பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாத அவ்விளைஞர்கள், அப்பெண்களை பத்திரமாக அனுப்பி விட நினைத்தனர்.
இதற்குள் ஃபிளாட்டின் வாசலில் ஒரு சிறு கூட்டம் சேர்ந்து விட, அசோசியேஷன் தலைவரும், இன்னும் சில அடிபொடிகளும் அப்பெண்களை வழிமறித்து செல்ல விடாமல் தடுத்ததோடு, அவர்களை தள்ளிவிட்டு, ஆபாசமான செய்கைகளை செய்திருக்கின்றனர். பலபேர் முன்னிலையில், அசிங்கமாகவும் திட்டியிருக்கிறார்கள்!
இரு பெண்களில் சற்று தைரியமானவர், அந்த அசோசியேஷன் தலைவரை கண்ணியமாக நடந்து கொள்ளும்படி கூறியதற்கு, அவரது மனைவி, அப்பெண்ணின் கையை பிடித்து முறுக்கியுள்ளார் (பெண்ணுக்கு பெண் தான் எதிரி போலும்!). அந்த கும்பலில் ஒரு நல்ல பெண்மணி இருந்ததால், எந்த ஆபத்தும் இல்லாமல், அவ்விரு பெண்களும் அங்கிருந்து செல்ல முடிந்தது.
இது நடந்த பின்னர், தான் செய்ததை மறைக்க வேண்டி, அசோசியேஷன் தலைவர் (கோகுல்,விஷால் தங்கியிருந்த ஃபிளாட்டில்) சந்தேகத்துக்குரிய செயல்கள் நடப்பதாக எக்மோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவ்விளைஞர்கள் காவல நிலையத்திற்கு அழைக்கப்பட்டதில், சில நாட்களில் தாங்கள் ஃபிளாட்டை காலி செய்து விடுவதாகவும், அதுவரை விருந்தினர் யாரும் வராதவாறு பார்த்துக் கொள்வதாகவும் எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது. என்ன கொடுமை, பாருங்கள் !?!?! இளைஞர்கள் தங்கியிருக்கும் ஃபிளாட்டின் உரிமையாளருக்கும் இந்த சங்கதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது இன்னொரு கொடுமை! ஆனால், மற்ற ஃபிளாட் உரிமையாளர்கள் கொடுத்த பிரஷரில், அவர் இவ்விளைஞர்களை ஃபிளாட்டை காலி செய்து விடும்படி கூறியிருக்கிறார்!
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அண்ணன் (சந்தோஷ்), அந்த அசோசியேஷன் தலைவர் தான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்காவிடில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளார். அப்பெண்களும், தவறு செய்தவர்கள் தகுந்த தண்டனை பெற ஆவன செய்யப்போவதாக தைரியமாக பேசியிருப்பது, மற்ற பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஒருவர் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கும், அப்பெண்களை ஆபாசமாகத் திட்டியதற்கும், தள்ளி விட்டதற்கும், சட்டத்தைக் கையில் எடுக்க முயன்ற அடாவடித்தனத்திற்கும், காரணமானவருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரில், பெண்கள் மேல் செலுத்தப்படும் இது போன்ற வன்முறைச் செயல்கள் பெருகி வருவது சமூகச்சூழலின் சீர்கேட்டை சுட்டிக்காட்டுகிறது. இது தனிமனிதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலும் கூட!
அந்த அசோசியேஷன் தலைவருக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதை விடுத்து, அப்பெண்களிடம் அராஜகமாக நடந்து கொண்டது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த self appointed கலாச்சாரக் காவலரின் வீட்டுப் பெண்களை நினைத்தால் சற்று பரிதாபமாக இருக்கிறது (அல்லது) இவர்களின் moral policing வீட்டுக்கு வெளியில் மட்டும் தானா ???
மங்களூரில் ராமசேனா குண்டர்கள் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகளுக்கு சிறிதும் குறையாதது இது :-( சென்னையில் ஆரம்பித்துள்ள இந்த moral policing செயல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பல "கலாச்சாரக் காவலர்கள்" உருவாகி சட்டத்தைக் கையில் எடுக்க முற்படுவார்கள்
சென்னையில் வாழ்ந்து வரும் பிரபல ஃபேஷன் டிசைனர் ரெஹானே, இந்த விஷயத்தை அழகாக summarize செய்துள்ளார்!
I sometimes feel sad for these self-appointed custodians of morality. They need to get a life, lighten up and find a occupation. Otherwise, they'll only belong to the party pooper ranks
எ.அ.பாலா
நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா, இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள்
36 மறுமொழிகள்:
Test !
இந்து கலாச்சாரத்தைக் காக்க, இது போன்று நம் இந்து பெண்கள் சீரழிவதை தடுக்க, மறக்காமல் வாக்களிப்போம் தாமரை சின்னத்திற்கே!
ஏலே மக்கா, இவனுவ இஙகேயும் வந்துட்டானுவளா..!!!
மிகவும் கண்டிக்கதக்கது .அடுத்தவன் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது என்ன கலாச்சாரமோ?
நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது அடிக்கடி இப்பெண்கள் அந்த ஆண் நண்பர்களின் பிளாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது இல்லையா? ஏதேனும் லாட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டியதை அபார்ட்மெண்டில் மேற்கொண்டால் நாங்கள் எல்லாம் கேணையர்களா என்ன? அடித்து உதைத்தது சரிதான். அப்போது தான் சுதந்திரம், பெண்ணுரிமை என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு ஆண்களின் வஞ்சக வலையில் விழும் எம் பெண்களுக்கு புத்தி வரும். பயம் வரும்.
இதுபோன்ற சமூகச் சீரழிவுச் செய்திகளுக்கு ’பெண்ணுரிமை’ என்ற போர்வையில் ஆதரவளிக்கும் ஆண்கள், உண்மையில் அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களே என்பதில் ஐயமில்லை. இதுவல்ல பெண்ணுரிமை. இது அல்ல பெண் சுதந்திரம்.ஆணுக்கு நிகராகச் சீரழிவதில் இல்லை பெண் சுதந்திரம். சாதிப்பதில்தான் இருக்கிறது.
எம் சகோதரிகள் போலிப் பெண்ணுரிமை பேசித் திரியும் ஆண்களின் வஞ்சக வலையில் விழாமல் திருந்தி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
- ப்ரியா
///Yes. Every one should apologise to Santosh. The likes of Santosh will bring Girls screw them take photographs and will becomes anti socials. The Girls who get involved will cry and the matter will go to the police. The flat neighbours will have to wait and watch silently till then. If nothing was wrong why IE should change the name of the girls so involved? Let the parents of the said girls come out openly and say that nothing was wrong in the said flat. And the girls parents and the boy's parents know what ever was happening there///
வருண் காந்தி,
ராமசேனாவுக்கும் பிஜேபிக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க ;-)
ஊர்சுற்றி,
//ஏலே மக்கா, இவனுவ இஙகேயும் வந்துட்டானுவளா..!!!
//
களி தின்னா சரியா ஆயிடும்னு நினைக்கிறேன் :)
ஜோ,
நன்றி.
மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. கவலைக்கிடமாக உள்ளது இது போன்ற செய்திகளை கேள்விபட்டால்
ப்ரியா என்ற பெயரில் வந்து உளறியிருக்கும் லூசு அனானிக்கு,
//ஏதேனும் லாட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டியதை அபார்ட்மெண்டில் மேற்கொண்டால் நாங்கள் எல்லாம் கேணையர்களா என்ன? அடித்து உதைத்தது சரிதான்.
//
இப்படியெல்லாம் நாக் கூசாமல் ஒரு கற்காலத்தைய காட்டுமிராண்டி போல கருத்து சொல்ல வெட்கமாக இல்லையா ???
சந்தேகம் இருந்தால், காவல் துறையிடம் புகார் தரட்டுமே! அராஜகமாக சட்டத்தை கையில் எடுத்தது தவறு என்று கூறியிருக்கிறேன்.
//இதுபோன்ற சமூகச் சீரழிவுச் செய்திகளுக்கு ’பெண்ணுரிமை’ என்ற போர்வையில் ஆதரவளிக்கும் ஆண்கள், உண்மையில் அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவர்களே என்பதில் ஐயமில்லை.
//
உம்மைப் போன்ற ஆட்களுக்குப் புரிய வைப்பது கடினம். நீங்க்ள் திருந்தவும் சான்ஸ் கம்மி :(
//எம் சகோதரிகள் போலிப் பெண்ணுரிமை பேசித் திரியும் ஆண்களின் வஞ்சக வலையில் விழாமல் திருந்தி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
//
இதை உம்மைப் போன்ற ஆணாதிக்கத்தில் ஊறிய ஆட்கள் சொல்வது தான் காமெடியாக உள்ளது :)
Anony2,
///
Yes. Every one should apologise to Santosh. The likes of Santosh will bring Girls screw them take photographs and will becomes anti socials. The Girls who get involved will cry and the matter will go to the police. The flat neighbours will have to wait and watch silently till then. If nothing was wrong why IE should change the name of the girls so involved? Let the parents of the said girls come out openly and say that nothing was wrong in the said flat. And the girls parents and the boy's parents know what ever was happening there///
No one is asking the "morally minded" neighbours to keep quiet. If they feel that something illegal has been happening for quite sometime, they could have complained to the police.
Taking law into their hands and threatening and physically abusing women is highly condemnable. They have no business to do such a thing in a civilized society. That is my point.
It is basic decency on the part of media to withhold the names of the girls to ensure they dont get undesired publicity.
You are out of your mind when you ask the parents of the girls to come out openly and explain everything in public. They would not want the future of their children spoilt though the moral police brigade made an atrocious attempt :(
நீங்கள் கவனித்திருக்கலாம் - அறையில் தங்கியிருந்த ஆண்களுக்கு அடியில்லை, பெண்களுக்குத்தான். மங்களூர் பப்பிலும் இதுவே நடந்தது.
இந்தக் கலாச்சாரக் காவலர்களின் குறிக்கோள் பெண்களை உடல்-ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கி, அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்க முயல்வதுதான்.
பாலா,
பெண்களைக் குற்றம்சாட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அந்த பெண்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும். இங்கு நடந்த காரியம் இந்த விஷயத்தில் கண்டிக்கப்படவேண்டியது. ஒரு பில்டிங் பிளாட்களில் பல விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அங்குள்ளவர்கள் கடைபிடிக்கத்தான் வேண்டும். இதற்கெல்லாம் போலீசிடம் முறையிடத்தான் வேண்டும், குற்றப்பட்டவர்களிடம் பேசக்கூடாது என்பதெல்லாம் பிராக்டிகல் இல்லை. நீங்கள் கலாசாரக் காவலர்களைப் பிடிக்காததால் இப்படி எழுதுகிறீர்கள். நாளைக்கே உங்கள் பிளாட்டில் உங்கள் குடும்பத்திற்கு ஒரு இடைஞ்சல் வருமானால் நீங்கள் அதை நேரிடையாக அணுகாமல் போலீஸிடம் போய் நிதானமாக FIR ஆ போட்டுக்கொண்டிருப்பீர்.
மேலும், இந்த பிளாட் நிர்வாகிகள் மடையர்கள், காட்டுமிராண்டிகள் மாதிரி நீங்கள் சித்தரிப்பது உங்கள் வெறியையே காட்டுகிறது. திடுதிப்பென்று அங்கு வசிப்பவர்கள் கூட்டமாய் போய் அங்கு போய் சண்டை போடுவது சாதாரணமாய் நடக்காது. இந்த விவகாரம் ரொம்ப காலமாய் போய்க்கொண்டிருக்கவேண்டும். அதுவும், இந்த பிளாட் ஒரு மேல்மிடில்கிளாஸ் குடியிருப்பு என்று தோண்றுகிறது. அங்கு இப்படி காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். இந்த BPO வில் வேலை செய்பவர்களைப்பற்றி நிறைய தப்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் சென்னையில்தானே இருக்கிறீர்கள், இது கூட தெரியாமலா இருக்கிறீர்கள்.
முகத்தை முழுசாய் மறைத்துக்கொண்டு வேலை கெட்டு பிளாக் எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் அந்த பிளாட் நிர்வாகிகளைப்பார்த்து go get a life என்று சொல்வது நல்ல நகைமுரண். எனக்கென்னவோ அந்த பிளாட் காரர்கள் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறதாய் தோன்றுகிறது.
நேற்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் நீங்கள் சொல்லும் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்தி பார்த்தேன். தன்னைக் கெடுத்த ஒரு முஸ்லிமை வற்புறுத்தி மதம் மாற்றி நிக்காஹ் செய்துகொள்ள வற்புறுத்தப்பபட்ட ஒரு பெண். நீங்களும் படித்திருப்பீர்கள். இன்று DNAINDIA.COM ல் வந்த முதல் பக்க செய்தியில் காஷ்மீரில் மைனர் பெண்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் திருமணம் செய்துகொள்ளப்படுகிறார்கள் என்று. அதே பத்திரிக்கையில் இன்னொரு செய்தி முஸ்லிம் பெண்ணை மணந்த இந்து டெல்லி இளைஞருக்கு கொலை மிரட்டல். அந்த முஸ்லிம் பெண்ணின் குடும்பம் காஷ்மீர் அரசியல் குடும்பம். இம்மாதிரி பலப்பல செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் தெரியாது போல சொன்னால் சுட்டிகள் கொடுக்கிறேன். ஆனால், நீங்கள் அந்த மாதிரி "கலாசார காட்டுமிராண்டிகளை" ஒரு தடவையாவது கண்டித்து ஒரு பதிவு போட்டு பின்னர் முதாலிக் சேனை யை வைது ஒரு பதிவு போடுங்கள். அதுவரை உங்களுக்கு go get a life தான் சரியாக இருக்கும்.
சொல்மண்டி
இந்தியா மற்றொரு தலிபான் தேசமாகி வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..
தலிபான்களுக்கும், ராம சேனா போன்ற ரவுடி கும்பலுக்கும் பெரிய வித்தியாசமில்லை...
ராகவன்,
உங்கள் பின்னூட்டத்தில் 2 சர்ச்சைக்குரிய சொற்களை நீக்கி உள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மன்னிக்கவும்.
எ.அ.பாலா
*****************************
G.Ragavan said...
இந்தக் கலாச்சாரக் காவலர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா.
அந்தப் பொண்ணுங்களும் பசங்களும் என்ன பண்ணா எனக்கென்ன... ஏதோ அக்கறைல செய்றதா இருந்தா... அவங்ககிட்ட நல்லபடி பேசலாம்ல. அத விட்டுட்டு.. இந்த மாதிரி ரவுடித்தனம் பண்றது ஆண்மையில்லாத்தனம். என்னது...அவரோட பொண்ணாட்டியும் கூடச் சேந்து ரவுடியிசம் பண்ணாங்களா? ஹி ஹி கற்புக்கரசி. கணவன் சொல் பேச்சு மீறா உத்தமி வாழ்க :P
பிரியாங்குற பேர்ல ஒரு ஆண் பின்னூட்டம் போட்டிருக்குறதாத்தான் நெனைக்கிறேன். பெண் பெயரில் ஆண் பின்னூட்டம் போட்டா... அத எப்படிச் சொல்றது?! ;) இனிமே அவருக்கு நெறைய டிமாண்டு இருக்கும்னு நெனைக்கிறேன். :P
இந்த மாதிரி ...EDITED..... அசோசியேஷன் தலைவர் போன்ற ....EDITED .... நல்ல மருத்தவம் செய்ய நிதி திரட்டனும். ஏதாச்சும் செய்யனுங்க. பாவம். இல்லைன்னா... என்ன செய்றோம்னே தெரியாம.... நாளைக்கு அவங்களை அவங்களே எதாச்சும் செஞ்சுக்கப் போறாங்க. ஐயோ...அந்த நடிகையை நெனச்சுச் செஞ்சிட்டேன்.. இந்த நடிகையை நெனச்சுச் செஞ்சிட்டேன்... பண்பாடு போச்சே.. கலாச்சாரம் போச்சேன்னு தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுக்குவாங்க. ஏதாச்சும் செய்ங்க சார்.
5:12 PM, March 29, 2009
**********************
//இதற்கெல்லாம் போலீசிடம் முறையிடத்தான் வேண்டும், குற்றப்பட்டவர்களிடம் பேசக்கூடாது என்பதெல்லாம் பிராக்டிகல் இல்லை. நீங்கள் கலாசாரக் காவலர்களைப் பிடிக்காததால் இப்படி எழுதுகிறீர்கள்.
//
அடிதடியிலும், வன்முறையிலும் நம்பிக்கை கொண்ட உங்களிடம் பேசி எந்தப் புண்ணியமும் இல்லை என்பதால், உங்களுக்கு என் பதில்: Please, GO, GET A LIFE with RAM SENA!!!!
//அதுவும், இந்த பிளாட் ஒரு மேல்மிடில்கிளாஸ் குடியிருப்பு என்று தோண்றுகிறது. அங்கு இப்படி காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் சந்தேகப்பட்டிருக்கவேண்டும்.
//
காட்டுமிராண்டித்தனம் என்று நீங்களே ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி!
//முகத்தை முழுசாய் மறைத்துக்கொண்டு வேலை கெட்டு பிளாக் எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் அந்த பிளாட் நிர்வாகிகளைப்பார்த்து go get a life என்று சொல்வது நல்ல நகைமுரண்.
//
மூஞ்சி ஒன்று தான் Identity-யா ? 5 வருஷமா எழுதறவனைப் பார்த்து நல்லாத் தான் ஜோக் அடிக்கறீங்க :) போயி புள்ளைக் குட்டிங்களை படிக்க வையுங்க ;-)
மின்னல்,
கருத்துக்கு நன்றி.
ஜ்யோவ்ராம் சுந்தர்,
//இந்தக் கலாச்சாரக் காவலர்களின் குறிக்கோள் பெண்களை உடல்-ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கி, அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்க முயல்வதுதான்.
//
அந்த ஒரு "பயங்கரமான" காரணத்துக்காகத் தான், இது போன்றவை வன்மையாக கண்டிப்பட வேண்டியவை. இதற்கான தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் !!!
அது சரி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ராகவன்,
கொஞ்சம் சூடா இருப்பது போல் தெரிகிறது !!! புரிந்து கொள்ளக் கூடியது தான்.
பதிவின் நோக்கம் திசை திரும்ப வேண்டாம் என்று தான் தங்கள் பின்னூட்டத்தை கொஞ்சமாக எடிட் செய்ய வேண்டியிருந்தது. மன்னிக்க.
என்னடா.. இது குறித்து யாரும் எதுவும் எழுதவில்லையே என்று நினைத்தேன், உங்கள் பதிவைப் பார்க்கும் வரை... நன்றி பாலா.
சொல்மண்டி,
//தன்னைக் கெடுத்த ஒரு முஸ்லிமை வற்புறுத்தி மதம் மாற்றி நிக்காஹ் செய்துகொள்ள வற்புறுத்தப்பபட்ட ஒரு பெண். நீங்களும் படித்திருப்பீர்கள். இன்று DNAINDIA.COM ல் வந்த முதல் பக்க செய்தியில் காஷ்மீரில் மைனர் பெண்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் திருமணம் செய்துகொள்ளப்படுகிறார்கள் என்று. அதே பத்திரிக்கையில் இன்னொரு செய்தி முஸ்லிம் பெண்ணை மணந்த இந்து டெல்லி இளைஞருக்கு கொலை மிரட்டல். அந்த முஸ்லிம் பெண்ணின் குடும்பம் காஷ்மீர் அரசியல் குடும்பம். இம்மாதிரி பலப்பல செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் தெரியாது போல சொன்னால் சுட்டிகள் கொடுக்கிறேன். ஆனால், நீங்கள் அந்த மாதிரி "கலாசார காட்டுமிராண்டிகளை" ஒரு தடவையாவது கண்டித்து ஒரு பதிவு போட்டு பின்னர் முதாலிக் சேனை யை வைது ஒரு பதிவு போடுங்கள்.
//
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் எதற்கு முடிச்சு போடுகிறீர்கள் ? தீவிரவாதிகள் செய்வதையும், சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் படித்த ஆட்கள் செய்வதையும் கம்பேர் செய்வது அடிப்படையில் தவறு.
மேலும், நான் என்ன / எதைப்பற்றி /எப்போது எழுத வேண்டும் என்று தீர்மானிக்க நீங்கள் யார் ? அதை நான் முடிவு செய்து கொள்கிறேன்.
டாபிக்கை திசை திருப்பாமல் பேசவும்.
அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருந்தாலும் என்ன தவறு? அது அவர்களின் தனி மனித சுதந்திரம்.ரேப் செய்தால் போய்க் கேளூங்க.( உடனே அனாநிகள் இந்த கருத்திற்கு எதிராக எதை எழுதினாலும் அடியேன் கவலையேபடமாட்டேன் என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன்) இந்த மானங்கெட்ட இந்திய நாட்டில் சக மனிதனை தீண்டத்தகாதவன் என்று சொல்லி அடிமைப்படுத்தியதற்கு வெட்கப்படாத கூட்டம் இன்று அடுத்த அடிமைத்தனத்திற்கான விதையை விதைக்க முற்படுகிறது. கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதியை இப்படி கேள்வி கேட்பார்களா?. இந்த மரம்வெட்டிக் கூட்டம் ஆரம்பித்து வைத்தது இது.
Is this a free country or not?
This hounding of consensual adults is most pathetic and disgusting.
And anyway why is that it is always the women who are hounded and hunted? Are not men equally reponsible?
இதில் பின்னூட்டமிடுகிற ந்ண்பர்கள் கூட மிக எச்சர்க்கையாக பின்னூட்டம் இருகின்றன. இம்மாதிரி கலாசார பாசிச நடவடிக்கைகள் சென்னைக்குள் பறவுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. முழுக்க முழுக்க இன்னொரு வீட்டுக்குள் நடந்த அந்த வீட்டில் இருந்தவர்களின் தனிப்பட்ட விஷயம். இவனுங்களுக்குத்தான் அடுத்தவன் பெட் ரூமில் என்ன நடக்கிறது என எட்டிப்பார்ப்பதுதானே. புத்தி அது எங்கே போகும். ஆண்கள் இருக்கும் வீட்டுக்குள் செல்லும் தனியாகச் செல்லும் பெண்கள் எலலம் கெட்டவர்கள். அங்கு செக்ஸ் தான் வைத்திருப்பார்கள் என்கிற வட இந்திய பாசிச வெறியை இங்கும் திணிக்கிறார்கள். பாலா முடிந்தால் அந்த பெண்ணின் சகோதரனின் தொடர்பு எண்ணை எனக்கு கிடைக்கத் தாருங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து பல நண்பர்களின் உதவியோடு இந்த பாசிஸ்டுகளை எதிர் கொள்வோம்.
அற்புதமான பதிவு பாலா.
கலாசார காவலர்களின் இம்மாதிரி செயல்கள் நமது அரசியல் சட்ட சாசனத்தில் தனிமனிதனுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் அனைத்துக்கும் வேட்டு வைக்கின்றன. நண்பர்கள் வீட்டுக்கு பெண்தோழிகள் போனாலே சந்தேகப்படும் இந்த மிருகங்கள் இனிமேல் இரு ஆண்கள் தனியாக ஒரு அபார்ட்மெண்டில் சந்தித்தால் அதை ஹோமோசெக்ஸ் என்று கூறி அடிக்கதுவங்கினாலும் ஆச்சரியமில்லை.
அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உளவுபார்க்கும் Peeping toms ஆக இந்த கல்ச்சர் காப்ஸ் மாறிவருவது உண்மையிலேயே நம் கலாசாரத்துக்கு தலைகுனிவான விஷயம் தான்.இவர்கள் செய்யும் இந்த அயோக்கியத்தனதை நம் கலாசாரத்தின் பேரால் செய்வது நம் ஆயிரமாயிரம் ஆண்டுகால கலாசாரத்தை அவமதிப்பதாகும்.
I think the building peoples are gone in right path.
So many prastitutions doing like this in chennai.
If the youngsters gone in right way,just vocate the building.
naren
இந்தப் பதிவும் இந்தப் பதிவை ஆதரித்துப் பின்னூட்டம் போட்ட அனைவரும் ஒரு பக்க சார்புடையதாகவே பேசித் தாங்கள் அனைவரும் தனி மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் என்பது போன்ற தோற்றத்தை நிறுவ முயன்றிருக் கின்றனர் . பத்திரிக்கையில் வந்த செய்தியும் ஒரு பக்க சார்புடையதே.எந்தத் தரப்பு வாதத்தை எடுத்தால் நல்ல வியாபாரம் ஆகுமோ அதை மட்டுமே செய்திருக்கின்றனர். உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய முற்படாமல் இப்படி நடந்ததாகச் சொல்கிறார்கள் ,இப்படி நடந்தால் அது தப்பு என்று திண்ணை வாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பதிவை எழுதியவரும் பின்னூட்டம் இட்டவர்களும்.அதன் நீட்சியாக நானும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்--- தனி மனித உரிமைகள் இருக்கும் அதே நேரத்தில் சமூக ஒழுக்கம் அல்லது கடமை என்றும் ஒன்று உள்ளது,அதையும் மீறாத வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.அப்படி மீறப்படும் போது சில எமோஷனல் அத்துமீறகள் நடக்கும் என்பது கண்கூடு.இதை போய் நீ போலிசில் தான் சொல்ல வேண்டும் என ரூல்ஸ் பேசும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்கிறேன்-யாராவது என்னை அத்து மீறி தவறாக பேசினால்-அது பெண்ணாக இருந்தாலும் சரி--முதலில் ஆன் த ஸ்பாட் செவுளில் ஒன்று கொடுத்து விட்டு அப்புறம் தான் லீகல் ஆக்சன் ..இது தவறு என்பவர்கள்..என் தங்கை என் கண் முன்னே மானபங்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது நான் சின்சியராக 100 க்கு போன் பண்ணிக் கொண்டிருப்பேன் என்று " பொய் " சொல்லி உங்கள் முதுகில் சபாஷ் தட்டிக் கொள்ளுங்கள்.
வாழ்க தனி மனித உரிமைக் காவலர்கள் மற்றும் அவர்கலது சமூக அக்கறை
Dharan,
ஏழைகளை, வலிமை குறைந்தவர்களைத் தான் கேள்வி கேட்க முடியும் ? அரசியல்வாதிகளிடம் வைத்துக் கொண்டால செவிட்டில் விழுமே !!! கருத்துக்கு நன்றி.
//
இந்த மானங்கெட்ட இந்திய நாட்டில் சக மனிதனை தீண்டத்தகாதவன் என்று சொல்லி அடிமைப்படுத்தியதற்கு வெட்கப்படாத கூட்டம் இன்று அடுத்த அடிமைத்தனத்திற்கான விதையை விதைக்க முற்படுகிறது.
//
ஆணித்தரமான கருத்து...
/தனி மனித உரிமைகள் இருக்கும் அதே நேரத்தில் சமூக ஒழுக்கம் அல்லது கடமை என்றும் ஒன்று உள்ளது,அதையும் மீறாத வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.அப்படி மீறப்படும் போது சில எமோஷனல் அத்துமீறகள் நடக்கும் என்பது கண்கூடு/
அந்த சமூக ஒழுக்கம் என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்படவேண்டுமே அன்றி கலாசார காவலர்களால் அமைக்கப்படகூடாது.அடுத்தவனை ஒழுங்கில்லை என்று சொல்ல இவர்கள் யார்?அந்த அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?
துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் இருக்கும் சமூக ஒழுக்கம் என்பது ஆண்களால் பெண்களுக்கு எழுதப்பட்ட ஒழுக்கவிதிகளாக இருக்கிறது.இவற்றின் நோக்கம் ஆணாதிக்கத்தை கட்டிகாப்பதும்,ஆண்களின் நலனை காப்பதுமே ஆகும்.இதை எதிர்த்து பெண்கள் கலககுரல் கொடுக்கும்போது வன்முறையால் அதை அடக்குவதற்கும் ஆணாதிக்க கும்பல் துணிகிறது.
ஆணாதிக்கம் தான் இங்கே சமூக ஒழுக்கமாகவும், கலாசாரமாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.இது அடித்து நொறுக்கப்படவேண்டிய அயோக்கியத்தனமே அன்றி ஒழுக்கமுமல்ல,வேறெதுவுமல்ல.
//என் தங்கை என் கண் முன்னே மானபங்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது நான் சின்சியராக 100 க்கு போன் பண்ணிக் கொண்டிருப்பேன் என்று " பொய் " சொல்லி உங்கள் முதுகில் சபாஷ் தட்டிக் கொள்ளுங்கள்.//
அந்த பெண்கள் உங்கள் தங்கையுமல்ல..அவர்கள் மானபங்கப்படுத்தப்படவுமில்லை.உங்கள் யாருடைய உதவியையும் அவர்கள் கேட்கவுமில்லை. சம்மனில்லாமல் ஆஜரானது அபார்ட்மெண்ட்வாசிகள் தான்.
Raji,
Thanks for you comment.
//why is that it is always the women who are hounded and hunted?
//
You have raised a very valid question
ஆதிரை,
இந்த சந்தேக புத்தியும், அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைப்பதும் அடிப்படையில் தவறு. கருத்துக்கு நன்றி.
//
பாலா முடிந்தால் அந்த பெண்ணின் சகோதரனின் தொடர்பு எண்ணை எனக்கு கிடைக்கத் தாருங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து பல நண்பர்களின் உதவியோடு இந்த பாசிஸ்டுகளை எதிர் கொள்வோம்.
//
முயற்சிக்கிறேன்.
செல்வன்,
எங்கே இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு நீங்க கமெண்ட் போட்டு !!!
//இவர்கள் செய்யும் இந்த அயோக்கியத்தனதை நம் கலாசாரத்தின் பேரால் செய்வது நம் ஆயிரமாயிரம் ஆண்டுகால கலாசாரத்தை அவமதிப்பதாகும்.
//
சும்மா நச்"சுன்னு சொல்லிட்டீங்க, பாஸ் !
Naren,
//I think the building peoples are gone in right path.
So many prastitutions doing like this in chennai.
If the youngsters gone in right way,just vocate the building.
//
Can you please learn English properly and then start commenting ? (OR) Please comment in thamizh itself... Thanks.
அறிவுஜீவி அனானி அவர்களுக்கு,
//தனி மனித உரிமைகள் இருக்கும் அதே நேரத்தில் சமூக ஒழுக்கம் அல்லது கடமை என்றும் ஒன்று உள்ளது,அதையும் மீறாத வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்
//
இரண்டு பெண்கள் ஆண் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது சமூக ஒழுக்கத்திற்கு எதிரானதா ? எப்படி அவர்கள் தவறான வழியில் தான் சென்றார்கள் என்று ஒரேடியாக முடிவு கட்டுகிறீர்கள் ? என்ன நியாயம் இது ?
//இதை போய் நீ போலிசில் தான் சொல்ல வேண்டும் என ரூல்ஸ் பேசும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்கிறேன்-யாராவது என்னை அத்து மீறி தவறாக பேசினால்-அது பெண்ணாக இருந்தாலும் சரி--முதலில் ஆன் த ஸ்பாட் செவுளில் ஒன்று கொடுத்து விட்டு அப்புறம் தான் லீகல் ஆக்சன் ..
//
உங்களுக்கு அடிப்படையாக ஒன்று புரியவில்லை :( நீர் செவிட்டில் அறை விடுவது பிரச்சினையில்லை !!! இங்கே அத்து மீறியது, அப்பெண்களை தரக்குறைவாகப் பேசியது, அந்த அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிக்கும் அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும். எனவே, நீங்கள் அவர்களைத் தான் செவுளில் ஒன்று கொடுக்க வேண்டும் !!!
//என் தங்கை என் கண் முன்னே மானபங்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது நான் சின்சியராக 100 க்கு போன் பண்ணிக் கொண்டிருப்பேன் என்று " பொய் " சொல்லி உங்கள் முதுகில் சபாஷ் தட்டிக் கொள்ளுங்கள்
//
நண்பர் செல்வன் இதற்கு அருமையாக பதில் கூறி விட்டார். அதாவது
"அந்த பெண்கள் உங்கள் தங்கையுமல்ல..அவர்கள் மானபங்கப்படுத்தப்படவுமில்லை.உங்கள் யாருடைய உதவியையும் அவர்கள் கேட்கவுமில்லை. சம்மனில்லாமல் ஆஜரானது அபார்ட்மெண்ட்வாசிகள் தான்."
எ.அ.பாலா
//ஆணாதிக்கம் தான் இங்கே சமூக ஒழுக்கமாகவும், கலாசாரமாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.இது அடித்து நொறுக்கப்படவேண்டிய அயோக்கியத்தனமே அன்றி ஒழுக்கமுமல்ல,வேறெதுவுமல்ல.
//
இதை விட சிறப்பாக இந்த அழுகலை விவரிக்க முடியாது
செல்வன்
என் பின்னூட்டத்திற்கு பாதியிலிருந்து பதில் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.
சட்டம் யார் கையில் எடுப்பது ?எடுத்தால் சரியா தப்பா என்பதெல்லாம் சூழ்நிலையின் தீவிரம்தான் தீர்மானிக்கிறதே அன்றி அதற்கு இப்படித்தான் இருக்கும் என்ற வரையரை சட்டத்தில் கூட இல்லை. ஏனென்றால் சூழ்நிலையை யாரும் அனுமானிக்க முடியாது.(எக. கொலை சட்டப்படி தவறு ஆனால் தற்காப்புக்காக நடந்த கொலையை சில தருணங்களில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டமே மன்னித்த நிகழ்ச்சிகளும் உள்ளது) அதனால்தான் மான பங்க உதாரணம் கொடுத்திருந்தேன். உன் தங்கையா எனக் கேட்டால் திரும்ப ப்ளாகில் கூச்சலிடும் "உங்கள்" + பாலா அவர்களின் தங்கையா எனக் கேட்பதைத் தவிர வேறென்ன செய்ய ? நீங்கள் எப்படி ஒரு விஷயம் தவறேன்று நினைக்கும் போது ரியாக்டிவாக ப்ளாகில்., பின்னூட்டத்தில் கூச்சலிடுகிறீர்களோ அது போல சூழ்நிலை மட்டுமே ஒரு செயலைத் தீர்மானிக்கிறது.அந்தச் செயல் சரியா தவறா என்பதும் சூழ்நிலையை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்க முடியும். அதனால் தான் திரும்பவும் சொல்கிறேன் அந்த நிகழ்ச்சியின் பிண்ணனி, சூழ்நிலை , இருதரப்பு வாதங்கள் இரண்டும் அறிந்து பின் உங்களது "தனி மனித உரிமைக் கோடுகளை " கிழியுங்கள். அதை விடுத்து ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என எவன் பெண்களை எது சொன்னாலும் "ராம சேனா" "கலாச்சாரக் காவலர்கள் " என்று முத்திரகளை தூக்கிக் கொண்டு அலையாதீர்கள்.
இந்த நாட்டின் சட்ட திட்டங்களே ஒருதலைப் பட்சமானது என நினைக்கும் பட்சத்தில் (அதாவது பேசிக்கே தப்பு என தீர்மானித்த பிறகு) அந்த ஃப்ளாட் வாசிகளின் மீது உங்களது கோபம் முட்டாள்தனமானது மட்டுமல்ல கையாலாகத் தனத்தினால் எழும் கோபம் கூட்.
அனானிமஸ் நண்பரே,
தற்கபபுக்கு சட்டத்தை தனிமனிதன் சில சமயங்களில் கையில் எடுக்கலாம்.அது சட்டவிரோதமோ, சட்டத்துக்கு உட்பட்டதோ எனக்கு தெரியாது.ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை அது நியாயமானது என்றுதான் கருதுகிறேன்.
அதே சமயம் இந்த சம்பவத்தில் தற்காப்புக்கு சட்டத்தை கையில் எடுத்தது மாதிரி எல்லாம் தெரியவில்லை.கும்பலாக சேர்ந்து இரு பெண்களை ஆபாசமாக திட்டியுள்ளனர்.திட்டுவதை கூட விட்டு தொலைக்கலாம்.பெண்களின் கையை பிடித்து முறுக்கியதை எந்த பட்டியலில் சேர்ப்பது?
இதில் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்துதான் கருத்து எழுதமுடியும்.இப்போதைக்கு பாலா எழுதியதை படித்துதான் கருத்து எழுதினேன்.வேறு தகவல்கள் கிடைத்தால் கருத்தை மாற்றிக்கொள்ள எனக்கு எந்த ஆட்சேபமுமில்லை.அதற்காக கடைசிவரை காத்திருந்து கருத்தை எழுதுவது என்றால் அப்புறம் எழுதவே முடியாமல் போய்விடும்.அவ்வப்போது கிடைக்கும் தகவலை வைத்துதான் கருத்துகூற முடியும்.
நம் நாட்டின் சட்டம் ஒருதலைபட்சமோ,இருதலைபட்சமோ அல்ல.சட்டம் ஒழுங்காகதான் இருக்கிரது.ஆனால் அமுல்படுத்தவேண்டிய அதிகாரிகளும்,நீதிதுறையும் தன சரியில்லை.அதனால் பலமுள்ளவனுக்கு வளைந்து கொடுத்து, பலகீனனுக்கு கடுமை காட்டுகிறது.அதனால் நான் சட்டத்தை எல்லாம் படித்து கருத்து கூறுவதில்லை.என் மனதுக்கு சரி என்று பட்டதை தான் எழுதுவது வழக்கம்.
இந்த சம்பவத்தில் தனிமனித சுதந்திரத்தில் அபார்ட்மெண்ட்வாசிகள் அத்துமீறி தலையிட்டதாக தான் எனக்கு படுகிறது.இதுவிஷயத்தில் வேறு ஏதேனும் தகவல் என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் எழுதவும்.தெரியாவிட்டால் என் நிலையை மாற்றிக்கொள்ளும் அவசியம் எழவில்லை என்ரே கருதுகிரேன்.
செல்வன்,
மீள் வருகைக்கு நன்றி.
உங்கள் கருத்தை மிக நேர்த்தியா கூறியிருக்கிறீர்கள்.
Post a Comment